| ADDED : செப் 18, 2011 10:16 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஹரிராம்ஸ் ஹோண்டாவில் 'சிபிஆர் 250 ஆர்' என்ற புது
ரக பைக் அறிமுகம் செய்யப்பட்டது. பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள ஹரிராம்ஸ்
ஹோண்டா ÷ஷாரூமில், புதிய பைக் அறிமுக விழா நடந்தது. ஹோண்டா ஏரியா சேல்ஸ்
மேலாளர் செந்தில்ராஜா தலைமை வகித்தார். ÷ஷாரூம் உரிமையாளர் சிவப்பிரகாஷ்
முன்னிலை வகித்தார். ÷ஷாரூம் சேல்ஸ் மேலாளர் சுனில் வரவேற்றார். பொள்ளாச்சி
வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி, புது
பைக்கை அறிமுகப்படுத்தினார். விபத்து ஏற்படுத்துவதை தவிர்ப்பது மற்றும்
போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய ஹோண்டா நிறுவனத்தில், 'ரைடர் டிரைனர்
மிஷின்' அறிமுகம் செய்யப்பட்டது. ஏரியா சேல்ஸ் மேலாளர் செந்தில்ராஜா
கூறுகையில், 'ஹோண்டா நிறுவனத்தின் உலக புகழ் பெற்ற 'சிபிஆர் 1100 ஆர்ஆர்,
விஎப்ஆர் 1200 எப்' ஆகிய பைக்குகளின் டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தை
தழுவி, 'சிபிஆர் 250 ஆர்' பைக் உருவாக்கப்பட்டது. ஆறு கியர், டிஜிட்டல்
ஸ்பீடா மீட்டர், கூல் என்ட் இஞ்ஜின், மிக அகலமான டியூப் லஸ் டயர், கம்பென்
ஏன்டி லாக் பிரேக் சிஸ்டம், இஞ்ஜின் திறன் 180 சிசி போன்ற நவீன
தொழில்நுட்பத்துடன் புது பைக் வெளியிடப்பட்டுள்ளது. சிவப்பு, கருப்பு,
சில்வர் ஆகிய மூன்று கலரில் பைக் கிடைக்கும்' என்றார்.