உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊரக திறனாய்வு தேர்வு 167 மாணவர்கள் பங்கேற்பு

ஊரக திறனாய்வு தேர்வு 167 மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இதில், 167 மாணவர்கள் தேர்வு எழுதினர். அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் வகையில் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நடந்த தேர்வை 23 பள்ளிகளை சேர்ந்த 167 பேர் எழுதினர். தேர்வையொட்டி, கல்வி மாவட்டத்தில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் 93 பேரும், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் 74 பேரும் சேர்த்து மொத்தம் 167 பேர் தேர்வு எழுதினர். காலை 9.00 மணி முதல் தேர்வு நடந்தது. தேர்வுக்கான ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இத்தேர்வில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை கிடைக்கும்.இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ