பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள நான்கு
பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் பெயர்களை அ.தி.மு.க.,
தலைமை அறிவித்துள்ளது. பெ.நா.பாளையம் பேரூராட்சி, அருண்குமார்: இவர்,
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியின் தலைவராக கடந்த 1996 ம் ஆண்டு முதல்
பதவி வகிக்கிறார். நான்காவது முறையாக போட்டியிடும் இவர், 1972ம் ஆண்டு
முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார். துவக்கத்தில்
பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரம் கிளை கழக செயலாளராக இருந்தவர். பின்,
அ.தி.மு.க.,வில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர், ஒன்றிய
எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர், மாவட்ட இளைஞரணி செயலாளர், கோவை வடக்கு மாவட்ட
பொருளாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். தற்போது, கோவை மாவட்ட
ஜெயலலிதா பேரவையின் கோவை மாவட்ட செயலாளராக உள்ளார். மழைநீர் சேகரிப்பு
திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த பேரூராட்சி விருதை முதல்வர்
ஜெயலலிதாவிடம் பெற்றவர். எண்.4 வீரபாண்டி பேரூராட்சி, ஜெயராமன்: இவர்,
வீரபாண்டி நகர ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், நகர செயலாளராகவும் பதவி
வகித்தவர். தற்போது, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளராக பதவி வகிக்கிறார்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் வீரபாண்டி பேரூராட்சி தலைவராக பதவி வகித்து
வருகிறார். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில்
செயல்படுத்தியதற்காக சிறந்த பேரூராட்சி விருதை முதல்வர் ஜெயலலிதாவிடம்
பெற்றவர். நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி, ஆனந்தன்: இவர், 1989 ம்
ஆண்டு கட்சியில் சேர்ந்தார். வார்டு கிளை செயலாளராக பதவி வகித்த இவர் 1991
முதல் நகர ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், 1996 முதல் 2001 வரை
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியின் 10வது வார்டு கவுன்சிலராக பதவி
வகித்தவர். கடந்த 2006ம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி 9 வார்டு
தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர். கடந்த 2009 ம்
ஆண்டு முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் நகர அ.தி.மு.க., செயலாளராக பதவி
வகிக்கிறார்.கூடலூர் பேரூராட்சி, குருந்தாசலம்: இவர், கடந்த 1977 ம் ஆண்டு
அ.தி.மு.க.,வில் இணைந்தார். கூ.கவுண்டம்பாளையம் பழைய புதூர் கிராமத்தை
சேர்ந்தவர். கிளை செயலாளராகவும், ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், பேரூராட்சி
அ.தி.மு.க., துணை செயலாளராகவும் இருந்தவர். தற்போது, கூடலூர் பேரூராட்சி
அ.தி.மு.க., நகர செயலாளராக உள்ளார்.