உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறை நகராட்சியில் 157 பேர் மனுதாக்கல்

வால்பாறை நகராட்சியில் 157 பேர் மனுதாக்கல்

வால்பாறை : வால்பாறை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு 7 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 150 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து கடந்த 22ம் தேதி முதல் நகராட்சித்தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்காக வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். வால்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் அ.தி.மு.க,, தி.மு.க., காங்., பா.ஜ., இ;கம்யூ., மா.கம்யூ., ம.தி.மு.க., பு.த., ச.ம.க., வி.சி., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி நாளான நேற்று வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, மனு தாக்கல் செய்தனர். நகராட்சித்தலைவர் பதவிக்கு 7 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 150 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பெறப்பட்ட மனு மீது இன்று பரிசீலிக்கப்படும். வரும் அக்.3ம் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாளாகும் என்று நகராட்சி தேர்தல் அதிகாரி ஆறுச்சாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை