உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டத்தில் 15,916 வேட்பு மனுக்கள் தாக்கல்

கோவை மாவட்டத்தில் 15,916 வேட்பு மனுக்கள் தாக்கல்

கோவை : கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8,699 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை, 15,916 ஆக உயர்ந்துள்ளது. உள்ளாட்சித்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கடைசி நாளான நேற்று, கோவை மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வேட்பாளர்கள் வரிசையில் நின்று மனு தாக்கல் செய்யும் அளவுக்கு கூட்டம் இருந்தது. பல இடங்களில், 'டோக்கன்' பெற்று, மணிக்கணக்கில் காத்திருந்த பிறகே வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய முடிந்தது.மொத்தமுள்ள மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் 17க்கும் சேர்த்து, 127 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், நேற்று மட்டும் 87 வேட்பாளர்கள் மனு கொடுத்துள்ளனர். மொத்தமுள்ள 155 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கும் சேர்த்து, 996 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று மட்டும், 613 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில், 228 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்கள் உள்ளன. இவற்றுக்கு 1,428 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் 679 பேர், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மனு கொடுத்துள்ளனர். இவற்றிலுள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 7,806 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு, மொத்தம் 47 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 36 பேர், மேயர் பதவிக்கு மனு கொடுத்தனர். மாநகராட்சியின் 100 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு மொத்தம் 1,443 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று மட்டும் 1,091 பேர் மனு கொடுத்துள்ளனர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை நகராட்சிகளின் சேர்மன் பதவியிடங்களுக்கு மொத்தம் 49 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 35 பேர் மனு செய்துள்ளனர். இம்மூன்று நகராட்சிகளில் மொத்தமுள்ள 90 கவுன்சிலர் பதவியிடங்களுக்கு, 687 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 432 பேர், நேற்று மனு கொடுத்துள்ளனர். மொத்தமுள்ள 37 பேரூராட்சிகளின் சேர்மன் பதவிகளுக்கு 284 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், நேற்று பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 179 ஆகும். பேரூராட்சி கவுன்சிலர் பதவியிடங்களுக்கு மொத்தம் 3,049 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்; நேற்று ஒரே நாளில் 1,741 பேர் மனு கொடுத்தனர். மாவட்டத்தில் மொத்தமுள்ள 3,248 உள்ளாட்சி பதவிகளுக்கு 15,916 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 8,699 பேர் மனு கொடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை