சமுதாய கருத்துக்களை சரியாக கூறுகிறது தினமலர் நாளிதழ்
கோவை : தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து நடத்திய, கருத்தரங்கில், பிரபல மனநல மருத்துவர் மோனி பேசியதாவது:ஒரு குழந்தை அடம்பிடித்து கேட்கும் பொருளை, தாமதமாக கொடுக்கும் போது அந்த குழந்தைக்கு தானாக தன்னம்பிக்கை ஏற்படுகிறது. 3 வயதில்தான் குழந்தைக்கு, மனம் வளர்ச்சி அடையும். அப்போது அவர்கள் செய்யும் குணாதிசயங்களை விட்டு விட வேண்டும். குழந்தைகளுக்கு நீதி கதைகளை சொல்லி கொடுக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் கட்டாயம் வேண்டும். பொருளாதாரத்தை சிறிது வளர்த்து, குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனைகளை கொடுக்காதீர்கள். அவர்கள் வளர்ந்து வரும் போது அது திருப்பி கிடைக்கும். குழந்தைகளை மொழியை கற்றுக்கொள்ள வற்புறுத்த வேண்டாம்.அதற்கு பதிலாக ஆடல், பாடல் கற்க ஊக்குவியுங்கள். ஒரு குழந்தை தவறு செய்தால் அப்போதே கண்டித்து விடுங்கள். பெண் குழந்தையையும், ஆண் குழந்தையையும் ஒரே போல வளர்க்க வேண்டும். குழந்தைகள் தோல்வி அடையும் போது, அவர்களை குற்றம் சொல்ல வேண்டாம். தினமலரில் வரும் சிறுவர் மலரை, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால், அவர்கள் பிற்காலத்தில் ஒரு நல்ல, ஆரோக்கியமான குழந்தைகளாக வருவார்கள். வயதானவர்களுக்கு ஆன்மிக மலர் வருகிறது. வாசகர்களுக்கு தேவையானதை ஆராய்ந்து கொடுக்கிறார்கள். பலரிடம் கருத்துகளை கேட்டு, வாசகர்களுக்கு தேவையானதை தருகிறார்கள், என்றார்.
'சமுதாய கருத்துக்களை சரியாக
கூறுகிறது 'தினமலர் நாளிதழ்'மனநல மருத்துவர் மோனி பேசுகையில், ''தினமலருக்கும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 25 வருடமான தினமலருடன் சேர்ந்து உதவி செய்து வருகிறேன். அதற்கு காரணம் சமுதாக கருத்துக்களை தினமலர் சரியாக கூறி வருகிறார்கள்.தினமலரில் வரும் சிறுவர் மலரை, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால், அவர்கள் பிற்காலத்தில் ஒரு நல்ல, ஆரோக்கியமான குழந்தைகளாக வருவார்கள். வயதானவர்களுக்கு ஆன்மிக மலர் வருகிறது. அதனை படித்தால் குடும்ப பிரச்னையில் இருந்து ஒதுங்கி வாழலாம்; பிரச்னை இல்லாமல் வாழலாம். அதேபோல, வாசகர்களுக்கு தேவையானதை ஆராய்ந்து கொடுக்கிறார்கள். பலரிடம் கருத்துகளை கேட்டு, வாசகர்களுக்கு தேவையானதை தருகிறார்கள்,'' என்றார்.