உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோபால் நாயுடு பள்ளியில் மாவட்ட கால்பந்து போட்டி

கோபால் நாயுடு பள்ளியில் மாவட்ட கால்பந்து போட்டி

கோவை:பள்ளி மாணவர்களுக்கு, மாநில அளவிலான கால்பந்து போட்டி, கோபால் நாயுடு பள்ளியில் நேற்று துவங்கியது. ஸ்ரீ கோபால் நாயுடு கல்வி அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டிகள் ஜன.,22ம் தேதி முதல் நாளை வரை நடக்கிறது. போட்டியை, ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளி தலைமையாசிரியர் சவுந்தர் ராஜ் மற்றும் கோவை மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். 19 அணிகள் நாக் அவுட் முறையில் போட்டியிடுகின்றன. நேற்று காலை நடந்த முதல் போட்டியில், யுவபாரதி பள்ளி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்., பள்ளி அணியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை