உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட கால்பந்து போட்டி: விவேக் வித்யாலயா ‛வாகை

மாவட்ட கால்பந்து போட்டி: விவேக் வித்யாலயா ‛வாகை

கோவை: பள்ளி கல்வித் துறை சார்பில், மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, பச்சாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்னராஜ், இறுதிப் போட்டியை துவக்கி வைத்தார். 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், விவேக் வித்யாலயா மற்றும் ஜெயந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. 2--1 என்ற கோல் கணக்கில், விவேக் வித்யாலயா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது இடம், மைக்கேல் ஜாப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி பெற்றது.வென்றவர்களுக்கு, பதக்கம் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் வேலுசாமி மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ