உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கற்பகம் பல்கலையில் நடந்த மாவட்ட கபடி அணி தேர்வு 

கற்பகம் பல்கலையில் நடந்த மாவட்ட கபடி அணி தேர்வு 

கோவை : மாநில அளவிலான சிறுவர் கபடி போட்டியில் பங்கேற்கும், கோவை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு, ஈச்சனாரி கற்பகம் பல்கலை மைதானத்தில் நேற்று நடந்தது. தேசிய அளவிலான 49வது ஜூனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள், பிப்., 1ம் தேதி முதல் தெலுங்கானாவில் நடக்கிறது. அதில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் வகையில், தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கம் சார்பில், வரும், 14 முதல் 16ம் தேதி வரை மாநில அளவிலான ஜூனியர் கபடி போட்டி, கோவை கற்பகம் பல்கலையில் நடத்தப்படுகிறது. இப்போட்டியில், மாநிலத்தில் பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன. அதிலிருந்து சிறந்த வீரர்கள், தேசிய கபடி போட்டிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். மாநில போட்டியில் பங்கேற்கும் கோவை அணிக்கான வீரர்கள் தேர்வு நேற்று நடந்தது. கற்பகம் பல்கலை உடற்கல்வி இயக்குனர் சுதாகர் மற்றும் கோவை மாவட்ட கபடி சங்க இணைச்செயலாளர்கள் சிவக்குமார், சண்முகம், முருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தேர்வில், பங்கேற்ற 85 வீரர்களில் இருந்து சிறந்த 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை