உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவிலான கபடி; ரத்தினம் மாணவியர் முதலிடம் 

மாவட்ட அளவிலான கபடி; ரத்தினம் மாணவியர் முதலிடம் 

கோவை : மாவட்ட அளவில் ஜூனியர் பெண்களுக்கான கபடி போட்டி, ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.கோவை மாவட்ட கபடி சங்கம் மற்றும் ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி சார்பில், 20வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான மாவட்ட கபடி போட்டி நடந்தது. போட்டியை, கோவை மாவட்ட கபடி சங்க இணை செயலாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடத்தப்பட்ட போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் போட்டியில், ரத்தினம் கல்லுாரி அணி, 27 - 16 என்ற புள்ளிக்கணக்கில் சூலுார் கபடி அகாடமியையும், 17 - 15 என்ற புள்ளிக்கணக்கில், வளர்பிறை கபடி அணியையும், 23 - 3 என்ற புள்ளிக்கணக்கில், சிவக்குமார் கபடி அணியையும் வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. வளர்பிறை கபடி அணி, இரண்டு வெற்றிகளுடன் இரண்டாமிடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணியினருக்கு, கோவை மாவட்ட கபடி சங்க செயலாளர் தண்டபானி, ரத்தினம் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஜாய்சி, உதவி இயக்குனர் ரமேஷ் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை