மேலும் செய்திகள்
அரவக்குறிச்சி மாணவர்கள் ஹாக்கியில் சிறப்பிடம்
04-Jul-2025
மேட்டுப்பாளையம்; கோவையில் மாவட்ட அளவில் நடந்த, பேச்சு போட்டியில், மூலத்துறை அரசு பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை காமராஜர் பிறந்த நாளை, ஆண்டுதோறும் ஜூலை 15ம் தேதியை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறது. கோவை ஆர்.வி.எஸ். மெட்ரிக் மேல் நிலையில் பள்ளியில் நடந்த, மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், 30க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த, 200 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், 6,7,8ம் வகுப்பு மாணவர்கள் பிரிவில், சிறுமுகை அடுத்த மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சுதர்சன் முதல் பரிசை வென்றார். இந்த மாணவருக்கு, 7000 ரூபாய் ரொக்கப்பரிசும், பரிசுக்கோப்பையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதே பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஸ்ரீதேவ், லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி ரவீணாஸ்ரீ ஆகிய இருவரும் இரண்டாம் இடம் பெற்றனர். இருவருக்கும் பரிசு தொகை பகிர்ந்து வழங்கப்பட்டது. முதல் இரண்டு இடங்களை பிடித்த மூலத்துறை மாணவர்கள் வருகிற 14ம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ள மாநில அளவிலான இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். மேலும் முதலிடம் பெற்ற மாணவன் சுதர்சன் தனக்கு கிடைத்த பரிசுத்தொகையான, 7000 ரூபாயில், 5 ஆயிரம் ரூபாயை, தனது பெற்றோருடன் பள்ளிக்கு வந்து, பள்ளியின் புரவலர் நிதிக்கு நன்கொடையாக அளித்தார். இந்த மாணவனையும், பெற்றோரையும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
04-Jul-2025