உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இ - பைலிங் வழக்கு தாக்கல் ஐகோர்ட் புதிய அறிவிப்பு

இ - பைலிங் வழக்கு தாக்கல் ஐகோர்ட் புதிய அறிவிப்பு

கோவை : இ- பைலிங் வழக்கு தாக்கல் நடைமுறை குறித்து, சென்னை ஐகோர்ட் சார்பில், மாவட்ட நீதிமன்றத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நீதிமன்றங்களில் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள், ஜாமின், முன்ஜாமின் உள்ளிட்ட அனைத்து வகையான மனுக்கள் நேரடியாக தாக்கல் செய்யப்படும் நடைமுறை மாற்றப்பட்டு, கடந்தாண்டு செப்., முதல் இ- பைலிங் வாயிலாக தாக்கல் செய்யப்படும் முறை அமல்படுத்தப்பட்டது.அதில், குடும்ப வழக்கு மற்றும் சிவில் வழக்குளுக்கு தளர்வு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையில் மேலும் பல மனுக்கள் மற்றும் வழக்குகள் சேர்க்கப்பட்டு, சென்னை ஐகோர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரண்டாவது மேல்முறையீடு, குற்றவியல் மேல்முறையீடு மற்றும் அனைத்து ஜாமின் மனுக்கள், நிபந்தனை தளர்வு, ஜாமின் வழங்குவதற்கான கால நீட்டிப்பு மற்றும் ஜாமின் நிபந்தனையை மாற்றியமைத்தல் போன்றவற்றுக்கும், இ- பைலிங் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில், ஜாமின் மனுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மனுக்கள், பகிர்வு வழக்குகள், அடமான வழக்குகள், விடுவிப்பு வழக்குகள், உடைமைக்கான வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளும், ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்யப்பட வேண்டும். இப்புதிய நடைமுறையை பின்பற்ற, கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு, சென்னை ஐகோர்ட் பதிவாளர் அலுவலகம் வாயிலாக, சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ