உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் தொழில்முனைவோர் முகாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் தொழில்முனைவோர் முகாம்

கோவை:ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாம் நடந்தது.கல்லுாரியின் முதல்வர் அலமேலு, துணை முதல்வர் கருப்புசாமி தலைமை தாங்கினர். புதுடெல்லி, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீத்தாராம் அதன் டெல்லி தலைமையகத்திலிருந்து, முகாமை துவக்கி வைத்தார்.வோல்வோ குழுமத்தின் புதுமை கண்டுபிடிப்புகளின் ஆலோசகர் அர்ஜுன் மற்றும் கவுரவ விருந்தினராக மத்திய கல்வி அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்பு துறை நிர்வாக ஆசிரியர், விகாஸ் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். தொழில்முனைவோர் கல்வியின் ஆதரவிற்காக புகழ்பெற்ற வாத்வானி அறக்கட்டளையுடன் இணைந்து, இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.முகாமில், தேசிய மற்றும் சர்வதேச புகழ்பெற்ற பேச்சாளர்கள் சிறப்புரை மற்றும் வடிவமைப்பு நிபுணர்கள் பயிற்சி அமர்வுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை