உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூரில் சமத்துவ பொங்கல் விழா

பேரூரில் சமத்துவ பொங்கல் விழா

தொண்டாமுத்தூர்:பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் 15ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் நடந்தது.இதில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரபி, கோவை மதுரை மாவட்ட முதன்மை குரு ஜார்ஜ் தனசேகர், அப்துல் ரஹீம் இம்தாதி என, பல சமயத்தினரும் இணைந்து, சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர்.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், சுப்பிர மணியன், டாக்டர் சந்தீப், அப்பாஸ் ஆகியோருக்கு, மக்கள் சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டது. அதன்பின், மலைவாழ் மக்களுக்கு, சேலை, மளிகை பொருட்கள், தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ