மேலும் செய்திகள்
கல்லுாரி சந்தையில் மாணவியர் ஆர்வம்
10-Jul-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் கிராமப்புற தொழில்முனைவோரை ஊக்குவித்தல் கண்காட்சி நடந்தது.ஊரக தொழில் முனைவோரை ஊக்குவித்தல், மாணவர்களுக்கு ஊரக தொழில் முனைவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனையை மேம்படுத்த ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கண்காட்சி நடத்தப்படுகிறது.அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்ட இயக்கம், என்.ஜி.எம்., கல்லுாரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மன்றம், பொருளாதார துறை சார்பில், இரு நாட்கள் கண்காட்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன், கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில், சான்றளிக்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள் நேரடியாக தயாரித்த பொருட்கள் மற்றும் மாணவர்கள் தங்களது திறன் அடிப்படையால் தயாரித்த பொருட்களை விற்பனை செய்தனர். மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் மதுரா, கண்காட்சியை பார்வையிட்டு பாராட்டினார்.விருதுநகர், ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், கோவை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து சுய உதவிக்குழுக்கள் பங்கேற்றனர்.அக்குழுவினர் தங்கள் குழு உறுப்பினர்களால், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கண்காட்சியில் இடம் பெறச்செய்திருந்தினர். மேலும், சுய உதவிக்குழுவினர் தொழில் துவங்க தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.விழா ஏற்பாட்டினை, மகளிர் திட்ட அலுவலர் நித்யா, பொருளாதார துறை தலைவர் அன்பரசு, பேராசிரியர்கள், தொழில்முனைவோர் மேம்பாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மலா, மணிகண்டன், காயத்திரி ஆகியோர் செய்திருந்தனர்.கண்காட்சியில் திரளாக பெண்கள் பங்கேற்றனர்.
10-Jul-2025