உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்கறி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

காய்கறி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

மேட்டுப்பாளையம்; கோடை மழை காரணமாக, விவசாயிகள் காய்கறி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சுண்டகரை, திம்மம்பாளையம், கணுவாய்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி மற்றும் காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தென்னை, பாக்கு, வாழைக்கு அடுத்தப்படியாக காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதம் காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், புதிதாக தக்காளி மற்றும் காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையினால், விளைநிலங்களில் ஈரப்பதம் காணப்படுகிறது. மேலும், விவசாய கிணறுகள், ஓடைகளில் தண்ணீர் வரத்தும் உள்ளது. இதையடுத்து, தற்போது விவசாயிகள் தக்காளி மற்றும் காய்கறி பயிரிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை