உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

 முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

சூலூர்: பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன வாய்க் காலை தூர் வார, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கு, பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். நீலம்பூரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த முதல்வரை, பரம்பிக்குளம் -ஆழியாறு திட்ட பாசன விவசாயிகள் சங்க நிர்வாக திட்டக்குழு தலைவர்பரமசிவம், உறுப்பினர்கள் அருண், நித்தியானந்தன், நல்லதம்பி, குருசாமி உள்ளிட்டோர் சந்தித்து, பி.ஏ.பி., வாய்க்காலை தூர்வார, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி. க்கள் ஈஸ்வரசாமி, ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ