உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையோரத்தில் குரங்குகளுக்கு உணவளித்தால் அபராதம்

சாலையோரத்தில் குரங்குகளுக்கு உணவளித்தால் அபராதம்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலையோரங்களில், குரங்குகளுக்கு உணவளித்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இவற்றை கண்காணிக்க வனத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஊட்டிக்கு வருகின்றனர். இவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலை வழியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள், சாலையோரங்களில் உள்ள இடங்களில் உணவு சாப்பிட்டு விட்டு மீதமான உணவுகள், பிளாஸ்டிக் தட்டுகள் போன்றவற்றை தூக்கி வீசுகின்றனர். அதே போல் ஊட்டி சாலையில் உள்ள சில ஹோட்டல்கள், வணிக வளாகங்க கடைக்காரர்கள் மீதமான உணவுகளை குப்பைகளில் வீசுகின்றனர். இதனை சாப்பிட குரங்கள் அதிக அளவில் வருகின்றன. குரங்களை பார்க்கும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவளிக்கின்றனர். உணவுக்காக, சாலையில் சுற்றி திரியும் குரங்குகள் மீது மோதாமல் இருப்பதற்காக வாகனங்களை திருப்பும்போது மலைப்பாதையில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குரங்குகள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் நிலையும் உருவாகிறது.இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், குரங்குகளுக்கு உணவளிப்போரை கண்காணிக்க வனத்துறை சார்பில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது உணவு அளித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலைகள் மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் ஓடந்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் ஆகும். குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை தினமும் அப்புறப்படுத்த வேண்டும், குப்பைகள் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் ஓடந்துறை ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது , என்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி