உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறக்கும் படையினர் வாகன சோதனை

பறக்கும் படையினர் வாகன சோதனை

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், சட்ட விரோத பண பரிமாற்றம் போன்றவைகள் நடக்க வாய்ப்புள்ளதால், பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, கிணத்துக்கடவு பகுதியில் புது பஸ் ஸ்டாண்ட் வழியே வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் சந்தேகப்படும் படியாக வந்த வாகனங்களையும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். ஆனால், வாகன சோதனையில், பணம், பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை