உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார் விபத்தில் மாஜி அமைச்சரின் பேத்தி பலி

கார் விபத்தில் மாஜி அமைச்சரின் பேத்தி பலி

மேட்டுப்பாளையம்:மேட்டுபாளையம் அருகே நடந்த கார் விபத்தில் 'மாஜி' அமைச்சரின் பேத்தி இறந்தார்.மதுரையை சேர்ந்தவர் திவ்யப்பிரியா, 28; பல் மருத்துவர். இவரது கணவர் கார்த்திக் ராஜா; மருத்துவர். திவ்யப்பிரியா அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி.திவ்யப்பிரியா தன் கணவர், உறவினர்களுடன் காரில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்று விட்டு, நேற்று மாலை மதுரை திரும்பி கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம், கல்லாறு முதல் வளைவு அருகே வந்த போது 'பிரேக்' பிடிக்காமல் மரத்தில் கார் மோதி கவிழ்ந்தது.இதில், படுகாயமடைந்த திவ்யபிரியா மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை