முன்னாள் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா
ஆனைமலை: வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு இல்ல திருமண வரவேற்பு விழா, ஆனைமலை தென்சங்கம்பாளையம் வேதநாயகம் கலையரங்கத்தில் நடந்தது. மணமக்கள் ஜானவி, அருண் ஆகியோரை முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் வாழ்த்தினர். எம்.எல்.ஏ. உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மகாலிங்கம், தனபாக்கியம், ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி, தேயிலை தோட்ட தொழிலாளர் தொழிற்சங்க தலைவர் அமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.