உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச கண் சிகிச்சை முகாம்; 270 பேருக்கு பரிசோதனை

இலவச கண் சிகிச்சை முகாம்; 270 பேருக்கு பரிசோதனை

வால்பாறை ; வால்பாறையில் நடந்த இலவச கண்சிகிச்சை முகாமில், 270 பேர் கலந்து கொண்டனர்.கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், வால்பாறை டாடா காபி மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, வால்பாறையில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.வால்பாறை அடுத்துள்ள செலாளிப்பாறை கிளப்பில் நடந்த மருத்துவ முகாமை, எஸ்டேட் சீனியர் மேலாளர் மந்தன்னா துவக்கி வைத்தார். தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சாய்ராம் தலைமையில் மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.முகாமில், கண்புரை, மாறுகண், நீரழுத்தநோய், மாலைக்கண்நோய், துாரப்பார்வை, கிட்டபார்வை உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்தும், இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டன.முகாமில் மொத்தம், 270 பயனாளிகள் கலந்து கொண்டனர். இதில், 38 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை டாடா காபி தோட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி