உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புளியம்பட்டியில் இலவச மருத்துவ முகாம்

புளியம்பட்டியில் இலவச மருத்துவ முகாம்

அன்னுார் : பேரூர் அடிகளார் மருத்துவமனை சார்பில் நடந்த, இலவச முகாமில், 195 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.கணேசபுரத்தில் உள்ள பேரூர் அடிகளார் மருத்துவமனை சார்பில், புளியம்பட்டியில், ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை, பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் துவக்கி வைத்தார். மருத்துவமனை தலைமை அலுவலர் சுப்பிரமணியம், மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், குறைவான கட்டணம் குறித்தும், விளக்கம் அளித்தார்.மூத்த குடிமக்களுக்காக 'சரணாலயம்' என்னும் அமைப்பை நிறுவி செயல்படுத்தி வரும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.முகாமில் நோய் தடுப்பு விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டது. 195 பேருக்கு மருத்துவ குழு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தது. மேல் சிகிச்சைக்கு சிலர் பரிந்துரைக்கப்பட்டனர்.ரோட்டரி சங்க நிர்வாகிகள் முகமது இப்ராகிம், பூபாலன், சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை