உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விலங்கியல் பூங்காவிலிருந்து பாம்புகளுக்கு விடுதலை!

விலங்கியல் பூங்காவிலிருந்து பாம்புகளுக்கு விடுதலை!

கோவை;'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, வ.உ.சி.மைதான வளாகத்திலுள்ள மாநகராட்சி விலங்கியல் பூங்காவிலிருந்த சாரை, கண்ணாடி, கட்டு விரியன், நாக பாம்புகள் சிறுவாணி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன.கோவை வ.உ.சி.பூங்கா வளாகத்திலுள்ள மாநகராட்சி உயிரியல் மையத்தில், போதுமான இட வசதி இல்லை என்று, மாநகராட்சி விலங்கியல் பூங்கா உரிமத்தை, மத்திய வனபாதுகாப்பு ஆணையம் ரத்து செய்தது.இதையடுத்து, கடந்த ஆண்டு நவ.,மாதம், சில உயிரினங்கள், வண்டலுார் மற்றும் வேலுார் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன. பாம்புகள், குரங்குகள், முதலை உள்ளிட்டவை மட்டும் அப்படியே விடப்பட்டிருந்தன. பாக்கியுள்ள உயிரினங்கள் குறித்து, மாநகராட்சி நிர்வாகம் மறந்தே போனது.இது குறித்து, நமது நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே முதலை, குரங்குகள் இடம் மாற்றப்பட்டன.நேற்று முன் தினம் வ.உ.சி.,பூங்காவிலிருந்த, 10 நாகப்பாம்புகள், 3 கண்ணாடிவிரியன், 3 கட்டுவிரியன், 4 சாரைப்பாம்பு ஆகியவற்றை பிடித்து, காற்றோட்டமுள்ள பிளாஸ்டிக் டப்பாக்களில் பூங்கா ஊழியர்கள் அடைத்தனர்.அவற்றை, கால்நடை மருத்துவர் சுகுமார் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், சிறுவாணியிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை