உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச வேட்டி சேலைகள்... வினியோகிக்க தயார்! பொங்கலுக்கு முன் வழங்கப்படும்

இலவச வேட்டி சேலைகள்... வினியோகிக்க தயார்! பொங்கலுக்கு முன் வழங்கப்படும்

தமிழக அரசு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, (சர்க்கரை கார்டு தவிர்த்து) இலவச வேஷ்டி, சேலைகள் வழங்க உள்ளது.மேட்டுப்பாளையம் தாலுகாவில், 94 முழு நேர ரேஷன் கடைகளும், 22 பகுதி நேர ரேஷன் கடைகளும் உள்ளன. இதில் 72 ஆயிரத்து, 749 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகள், ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் சங்கர்லால் ஆகியோர் கூறியதாவது: மேட்டுப்பாளையம் தாலுகாவில், 116 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் உள்ள கார்டுதாரர்களில், 68 ஆயிரத்து, 139 வேஷ்டிகளும், 69, ஆயிரத்து, 696 சேலைகளும், பொங்கல் பண்டிகை முன்னிட்டு வழங்கப்படுகின்றன. அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும் அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய்க்கான, டோக்கன், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்தும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக மக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். சூலூர்: சூலூர் தாலுகாவில், 1 லட்சத்து, 15 ஆயிரத்து, 20 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், 1 லட்சம் கார்டுதாரர்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு வேஷ்டிகள், சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதற்காக, 91 ஆயிரத்து, 83 சேலைகளும், 89 ஆயிரத்து, 40 வேஷ்டிகளும் சூலூர் தாலுகா அலுவலகத்துக்கு வந்துள்ளன. அவை பிர்கா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, அங்கிருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட உள்ளன. அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அன்னுார்: அன்னுார் தாலுகாவில் அன்னுார், எஸ்.எஸ்.குளம், இடிகரை ஆகிய மூன்று பேரூராட்சிகளும், 28 ஊராட்சிகளும் உள்ளன. இங்கு 68 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பொங்கலை முன்னிட்டு, 46 ஆயிரத்து 767 பேருக்கு வேஷ்டியும், 49,212 பேருக்கு சேலையும் வழங்கப்பட உள்ளது. இதற்காக தாலுகா அலுவலகத்தில் இருந்து வேஷ்டி, சேலைகள் ரேஷன் கடைகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. 'இன்று முதல் ரேஷன் கடைகளில் இலவச வேஷ்டி சேலை வழங்கப்படும்,' என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை