உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., மாணவர்களின் காதம்பரி இசை நிகழ்ச்சி

பி.எஸ்.ஜி., மாணவர்களின் காதம்பரி இசை நிகழ்ச்சி

கோவை;கோவை விழாவின் ஒரு பகுதியாக, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை சார்பில், காதம்பரி - 2024 இசை நிகழ்ச்சி நடக்கிறது.நிகழ்ச்சியில் கர்நாடக இசைக் கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்று மாலை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி மாணவர்களின் இன்னிசையே, தமிழிசையே எனும் இசைக்கச்சேரி நடந்தது.தொடர்ந்து, புல்லாங்குழல் இசைக்கருவி கலைஞர் ஜெயந்த் மற்றும், இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. நாளையும் இசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ