உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வங்கி கடன் பெற்று தேனீ வளர்க்கலாம்

வங்கி கடன் பெற்று தேனீ வளர்க்கலாம்

கோவை:கோவையில் மத்திய அரசின் கதர் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில், தேனீ வளர்த்தல் குறித்த சிறப்பு பயிற்சி கருத்தரங்கு, ஒய்.எம்.சி.ஏ., ஹாலில் நடந்தது. கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் இயக்குனர் சுரேஷ் துவக்கி வைத்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:சிலர் ஆர்வம் காரணமாக, தேனீ வளர்த்து வருகின்றனர். தேனீ வளர்ப்பு ஒரு நல்ல சுயதொழிலாகும். இதை முழு நேர தொழிலாக செய்தால், நல்ல லாபம் பெறலாம். ஆர்வம் உள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, தேனீ வளர்த்தல் குறித்த பயிற்சி அளித்து, தேனீ பெட்டிகள் இலவசமாக வழங்கி வருகிறோம். பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம், வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் தேனீ வளர்ப்பாளர்களுக்கு, 35 சதவீதம் வரை மானியம் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.கதர் கிராம தொழில் ஆணைய துணை இயக்குனர் வாசிராஜன், தமிழ்நாடு தேனீ வளர்ப்பு விவசாயிகள் தலைவர் ஜீனோ, செயலாளர் மணிகண்டன் காளிதாஸ், துணைச்செயலாளர் ஆனந்த் மற்றும் பயிற்சியாளர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ