உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எங்களுக்கு குடிநீர் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுங்கள்

 எங்களுக்கு குடிநீர் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுங்கள்

சூலூர்: 'எங்கள் ஊராட்சிக்கு தேவையான குடிநீரை கொடுத்து விட்டு, வேறு யாருக்கு வேண்டுமானாலும் குடிநீர் கொடுங்கள்' என, பட்டணம் ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பட்டணம் ஊராட்சி. இங்கு, 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை செய்யப்படாததால், பல ஆண்டுகளாக, மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், தனியார் நிறுவனத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டணம் ஊராட்சி மக்கள் மன்ற நிர்வாகி கோவிந்தராஜன் கூறியதாவது: பட்டணம் ஊராட்சிக்கு தேவையான குடிநீர் வழங்கப்படாததால், நாங்கள் அவதிப்படுகிறோம். ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் கூடுதலாக தண்ணீர் வழங்க பலமுறை கோரியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரில் இருந்து, தனியார் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி, தனியாக குடிநீர் குழாய்கள் பதித்து தண்ணீர் கொண்டு செல்ல பணிகள் நடக்கின்றன. பல ஆண்டுகளாக போராடி வரும் எங்களுக்கு தேவையான குடிநீரை கொடுத்து விட்டு, அதன்பின் வேறு யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள் என, யூனியன் அதிகாரிகளிடம் எங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி