உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மெட்டுவாவி பள்ளியில் மாணவர்களுக்கு நல்விருந்து

 மெட்டுவாவி பள்ளியில் மாணவர்களுக்கு நல்விருந்து

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு நல்விருந்து வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில், கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர் எடிசன் பெர்னாட் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் வரவேற்று, நல் விருந்து வழங்குவதன் நோக்கம் குறித்து பேசினார். மேலும், ஆசிரியர் பயிற்றுநர் செந்தில்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு பரிமாறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்