உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு போட்டி தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும்

அரசு போட்டி தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும்

கோவை;எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு, பாராட்டு மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) மற்றும் கோவை மாவட்ட தாம்ப்ராஸ் நல அறக்கட்டளை சார்பில், நடந்த இந்நிகழ்ச்சியில், தாம்ப்ராஸ் மாவட்ட பொதுசெயலாளர் கணேசன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். கார்கில் போரில் பங்கேற்ற, மேஜர் ரவிச்சந்திரன் பேசுகையில், ''ஆழமாகவும், அழுத்தமாகவும் படிப்பது, நம் வாழ்வில் உயர்வை தரும். அரசு போட்டித்தேர்வுகளை தவிர்த்து விடக்கூடாது. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். பண்பாடும், கலாசாரமும் நம்முடைய இரு கண்களை போன்றது. அதை எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது,'' என்றார். அவரை தொடர்ந்து பேசிய, ஆடிட்டர் வெங்கட்ரமணன், ''பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'அதை செய் இதை செய்' என்று சொல்வதை தவிர்த்து, புதியனவற்றை கற்றுக்கொடுத்து முன்மாதிரியாக இருக்க வேண்டும்.தவறினால், அவர்கள் படித்து வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக செல்வார்கள். அதன் பின் தாய்நாடு திரும்பமாட்டார்கள். அதனால் மிகுந்த கவனத்துடன் குழந்தைகளை கவனிக்க வேண்டும்,'' என்றார். சாவித்திரி போட்டோ ஹவுஸ் குரு, தொழிலதிபர் கிருஷ்ணசாமி, மகளிர் அணி துணை செயலாளர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்