உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிறுத்தை தாக்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம்

 சிறுத்தை தாக்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம்

வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை, ஜே.யி., பங்களா எஸ்டேட்டில், அசாம் மாநிலத்தை சேர்ந்த ரோஜாவெல்லி - ஷாஜிதாபேகம் ஆகியோரின் இளைய மகன் சைபுல் ஆலம், 5, நேற்று முன் தினம் இரவு, 7:15 மணிக்கு வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது, சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த, சிறுவனின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, 50,000 ரூபாய் நிவாரண தொகையை, வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி