உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மன்ற போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

 மன்ற போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

மேட்டுப்பாளையம்: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மன்றப் போட்டிகளில் வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மன்றப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் மாவட்ட அளவிலான போட்டிகள் கோவையில் நடைபெற்றது. இதில் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 9ம் வகுப்பு பிரிவில், தமிழ் பேச்சுப்போட்டியில், அன்பு என்ற மாணவன் முதலிடமும், ஆங்கிலப் பேச்சுப்போட்டியில் ஜேடன் மேஷாக் என்ற மாணவன் முதலிடமும், 6 மற் றும் 7ம் வகுப்பு பிரிவில் ஆங்கிலம் கவிதை எழுதும் போட்டியில் மாணவி கேயிட்லின் முதலிடமும் பெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர். பின், 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் கோவை சர்வஜனா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஆங்கில கவிதை எழுதுவதற்கான போட்டியில், மாணவி கேயிட்லின், மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பலர் பாராட்டினர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை