உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்க் கட்டடக்கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

பார்க் கட்டடக்கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கோவை: கணியூர் மற்றும் கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள, தமிழ்நாடு கட்டடக்கலை மற்றும் பார்க் கட்டடக்கலை கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினீயர்ஸ் தலைவர் சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். விழாவில், 79 இளங்கலை கட்டடக்கலை பட்டதாரி மாணவர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி, பொதுமேலாளர் சதிஷ்குமார், பேராசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை