உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைவர்கள் இல்லாமல் 26ம் தேதி முதல் கிராம சபை கூட்டம்

தலைவர்கள் இல்லாமல் 26ம் தேதி முதல் கிராம சபை கூட்டம்

சூலுார்; தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளின் பதவி காலம், கடந்த, 5 ம்தேதி முடிந்தது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகங்கள் தனி அலுவலரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக கோலோச்சி வந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் ஒவ்வொரு கிராம சபை கூட்டமும் நடந்து வந்தது. பதவி காலம் முடிந்த பின், ஊராட்சி தலைவர்கள் இல்லாமல், அதிகாரிகள் தலைமையில் முதல் கிராம சபை கூட்டம், வரும், 26ம் தேதி நடக்கிறது.கிராம சபையில், இயற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. 2024--25 நிதியாண்டில் எந்த திட்டத்தில் என்ன பணிகள், எவ்வளவு மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டன, அவற்றின் தற்போதைய நிலை என்ன என்ற விபரங்கள் கிராம சபையில் விவாதிக்க வேண்டும். டெங்கு ஒழிப்பு, துப்புரவு பணி, குடிநீர் தொட்டிகளை மாதம் இரு முறை சுத்தம் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வேண்டும். மத்திய அரசு வழங்கும், 15 வது நிதிக்குழு மானியத்தில், 2025--26 நிதியாண்டில் ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வளர்ச்சி திட்டம் தயாரிக்க வேண்டும். குடிநீர், வீடுகள் கட்டும் திட்டம் குறித்து செயல் திட்டங்கள் தயாரிக்க வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைவர்கள் இல்லாமல் அதிகாரிகளின் ஆட்சி எவ்வாறு உள்ளது என்பது இந்த கிராம சபை கூட்டத்தில் வெளிச்சத்துக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை