உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பிரம்மாண்ட விளையாட்டு விழா

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பிரம்மாண்ட விளையாட்டு விழா

பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், ராமகிருஷ்ண பரமஹம்சர் நூற்றாண்டு நினைவாக விளையாட்டு விழா நடந்தது.இதில், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மற்றும் எஸ்.எஸ். குளம் ஒன்றியங்களை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற் கல்வியியல் கல்லூரியில் படிக்கும், 95 மாணவர்கள் சார்பில், ஏற்கனவே நம் நாட்டின் பண்பாடு, கலாசாரம், பக்தி, தாய்மொழி பற்று, தேசப்பற்று கருத்துக்களை மையமாகக் கொண்ட பாடல்களுக்கு கட்டழகு பயிற்சி, கொடிப்பயிற்சி, தேங்காய் தொட்டி பயிற்சி, பூப்பந்து பயிற்சி, ஒயிலாட்டம், யோகாசனம், சிறு விளையாட்டு, அறிவியல் அறிவுரை பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற் கல்வியியல் கல்லூரி மைதானத்தில், ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்று கூடி பயிற்சிகளை செய்து காட்டினர். நிகழ்ச்சிக்கு, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில், மாருதி உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை