கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவிலில் வரும் 24ம் தேதி குண்டம் திருவிழா நடக்கிறது.கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள, பிளேக் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா, கடந்த 9ம் தேதி, கணபதி ஹோமம் மற்றும் கொடி கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நாளை, 13ம் தேதி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது.16ம் தேதி, அம்மன் மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 22ம் தேதி, விநாயகர் பூஜை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு, வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, ஆற்றிலிருந்து கோவிலுக்கு சக்தி அழைத்து வருதல் மற்றும் அம்மன் பூ பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.23ம் தேதி, காலை 7:00 மணிக்கு, அலங்கார பூஜைகள், மாவிளக்கு அழைத்து வருதல், கோவில் மண்டபம் பூ அலங்காரம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு, குண்டம் திறப்பு, சிறப்பு பூஜைகளும், மாலை 6:00 மணிக்கு, குண்டத்திற்கு பூ போடும் நிகழ்வுயும் நடக்கிறது.அன்று, இரவு 7:00 மணிக்கு, ஆற்றிலிருந்து பூவோடு கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி, அதிகாலை 2:30 மணிக்கு, பூ செண்டு மற்றும் கரகங்கள் அழைத்து வர ஆற்றுக்கு செல்லுத்தல் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு, அக்னி அபிஷேகம் மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு, ஆற்றுக்கு அழைத்து செல்லுதல் நடக்கிறது.25ம் தேதி, காலை 7:௦௦ மணிக்கு, மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 26ம் தேதி, காலை அலங்கார பூஜை, மாலையில் மகா அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு பூஜைகள் நடக்கிறது.