| ADDED : ஜன 07, 2024 11:00 PM
சூலுார்:கரவளி ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 11ம் தேதி ஹனுமன் ஜெயந்தி விழா மற்றும் ஆண்டு விழா நடக்கிறது.சூலுார் அடுத்த கரவளி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், 500 ஆண்டுகள் பழமையும், வியாச ராஜ சுவாமிகளால் கட்டப்பட்டதாகும்.இக்கோவிலில் வரும், 11ம் தேதி ஹனுமன் ஜெயந்தி விழா மற்றும் ஏழாம் ஆண்டு விழா நடக்கிறது.காலை, 8:00 மணிக்கு, ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடக்கிறது. 12:00 மணிக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.காலை, 10:00 மணி முதல் பாண்டு ரங்கன் பஜனை குழு மற்றும் மாருதி கலைக்குழுவின் நாம சங்கீர்த்தனம், கரிய மாணிக்க பெருமாள் பஜனை குழு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.மாலை, அச்சம்பாளையம் சண்முகம் கலைக்குழு, மாருதி கோலாட்ட குழுவினரின் நாமசங்கீர்த்தனம், பஜனை நடக்கிறது.அம்மன் கலைக்குழுவின் வள்ளி கும்மி ஆட்டம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.