| ADDED : ஜன 30, 2024 10:27 PM
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டம் காரமடை போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2023 ம் ஆண்டு 10 ஆயிரத்து 771 பேர் மீது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளது.காரமடை மெயின் ரோடு, தோலம்பாளையம் பிரிவு, புஜங்கனூர், தாயனூர், தென்திருப்பதி நால்ரோடு, சின்னதொட்டி பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகம் விபத்து ஏற்படுகிறது என போலீசாரால் கண்டறியப்பட்டு, இந்த இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு, விபத்து நடக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.மேலும் இந்த இடங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ம் தேதி வரை, காரமடை போலீசாரால் 10 ஆயிரத்து 771 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுகுறித்து காரமடை போலீசார் கூறுகையில், ஹெல்மெட் அணிந்து தான் இருசக்கர வாகனத்தை இயக்க வேண்டும். ஹெல்மெட் அணிவது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, என்றனர்.--