உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவையின் மறைந்த நீர்த்தாய் தெப்பக்குளம் மைதான வரலாறு

 கோவையின் மறைந்த நீர்த்தாய் தெப்பக்குளம் மைதான வரலாறு

மை சூர் ஆட்சிக் காலத்தில், கோவையின் மேற்குப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, இரண்டு பெரிய குளங்கள் வெட்டப்பட்டன. இன்றைய வாணியர் தெருவில் இருந்தது ஒன்று; மற்றொன்று இன்றைய தெப்பக்குளம் மைதானம். அப்போது இந்த இரண்டு குளங்களுக்கும், ஆட்சி செய்த மன்னர்களின் பெயர்களே சூட்டப்பட்டன. மாதேராஜா குளம் மற்றும் சிக்கேராஜா (சின்னராஜா) குளம். பின்னாளில் சின்னராஜா குளம் மூடப்பட்டு, இன்று நாம் பார்க்கும் தெப்பக்குளம் மைதானமாக மாறியது. 1920ல் குளம் மூடப்பட இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று, அந்த காலத்தில் நகரசபை புதிய சாக்கடை அமைப்புகளை உருவாக்கி, கழிவுநீர் தேக்கங்களை மாற்றி நகரின் சுகாதாரத்தை மேம்படுத்தும் தீவிரப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. நகரின் மையப் பகுதியில் இருந்த இந்தப் பெரிய குளம், சுகாதாரத்துக்கு தடையென கருதியதால், குளத்தை மூடும் முடிவு எடுக்கப்பட்டது. இரண்டு, இந்த குளத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைச் சாவுகள், மக்களை பதற்றமடையச் செய்ததால், குளத்தை நிரந்தரமாக மூடும் எண்ணம் வலுவடைந்தது. சிக்கேராஜா, 18ம் நுாற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர். அவரின் பெயரே குளத்துக்கும் சூட்டப்பட்டது. ஆனால் குளத்தின் பக்கத்தில் உள்ள ராஜவீதியில் அமைந்துள்ள, சவுடம்மன் கோயிலின் தெப்போற்சவம், ஆண்டுதோறும் இக்குளத்தில்தான் நடத்தப்பட்டு வந்ததால், மக்கள் வாய்மொழியில், 'தெப்பக்குளம்' என்ற பெயர் பரவலானது. காலப்போக்கில் ராஜாவின் பெயர் அழிந்து, திருவிழாவின் பெயரே மிஞ்சி, 'தெப்பக்குளம்' என்றும், அருகிலுள்ள வீதி, தெப்பக்குள வீதி' என்றும் நிலைத்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி