உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புனித ஜெபமாலை தேர் திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

புனித ஜெபமாலை தேர் திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கருமத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை பசிலிக்கா பழமையானது. இங்கு, 385வது ஆண்டு தேர்திருவிழா நடந்தது. கடந்த, 26 ம்தேதி, காலை கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவங்கியது. கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் பங்கேற்று மறையுரை ஆற்றினார். தினமும் திருப்பலி மற்றும் மறையுரைகள் நடந்தன. கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் கூட்டு பாடல்பலி நடந்தது. இருபால் துறவியருக்காக கூட்டு பாடல் பலி, தேர் பவனி ஆயர் தலைமையில் நடந்தது. புனித ஜெபமாலை அன்னையின் அலங்கார திருத்தேர் பவனி நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ