உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யூனியன் வங்கி நடத்திய வீடு, கார், கடன் மேளா

யூனியன் வங்கி நடத்திய வீடு, கார், கடன் மேளா

கோவை:கோவையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில், வீடு மற்றும் கார் கடன் மேளா, திருச்சி ரோட்டில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில், நேற்று துவங்கியது. கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜூ துவக்கி வைத்தார்.கண்காட்சியில், முன்னணி பில்டர்கள் மற்றும் கார் டீலர்கள் ஸ்டால் அமைத்துள்ளனர். அபார்ட்மென்ட்டுகள், தனி வீடுகள் மற்றும் சொகுசு பங்களாக்கள் உள்ளிட்ட, 100-க்கும் மேற்பட்ட புராஜெக்ட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டுக்கடன், கார் கடன் மற்றும் வங்கி கடன்களை, பொதுமக்கள் சுலபமாக பெறலாம். கண்காட்சியில் வீடு மற்றும் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, வீட்டுக்கடன் வட்டி, 8.30 சதவீதத்திலும், கார் கடன் வட்டி 8.70 சதவீதத்திலும் வழங்கப்படுகிறது. உடனடியாக கடன் ஒப்புதல் பெறலாம். காலை, 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை