உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வளர்ச்சி பணிகள் எப்படி நடக்குது? ஆய்வு செய்து கலெக்டர் அறிவுரை

வளர்ச்சி பணிகள் எப்படி நடக்குது? ஆய்வு செய்து கலெக்டர் அறிவுரை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். கிணத்துக்கடவு ஒன்றியத்தில், மக்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் ரோடு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கிறது. இதை மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதில், சொலவம்பாளையம் ஊராட்சியில் உள்ள நாற்றுப்பண்ணையில் இருக்கும் மரக்கன்றுகளை பார்வையிட்டார். முதற்கட்டமாக 6 அடி உயரம் உள்ள மரக்கன்றுகளை, முதல்வர் கிராம சாலை திட்டத்தின் வாயிலாக அமைக்கப்பட்ட ரோட்டின் இரு புறங்களிலும் நடவு செய்யவும், பண்ணையில் உள்ள பழ வகை மரக்கன்றுகளை ஊராட்சி பகுதியில் உள்ள பொது இடங்கள் மற்றும் நீரோடை ஓரம் நடவு செய்யவும் அறிவுறுத்தினார். நல்லட்டிபாளையம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பட்டணம் கிராமத்தில் அரசு திட்டத்தின் கீழ் கட்டப்படும், 32 தொகுப்பு வீடுகளின் நிலை, ரோடு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், சென்றாம்பாளையத்தில் கட்டப்படும் 'பி.எம்., ஜென்மன்' வீடு கட்டுமானத்தை ஆய்வு செய்து, அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என அறிவுறுத்தினார். இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்பாபு மற்றும் ஒன்றிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை