உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?

 மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?

ம னித உரிமை பாதுகாப்பு சட்டம் என்பது, வாழும் உரிமை, சுயமரியாதையுடன் வாழும் உரிமை, சமத்துவமாக வாழும் உரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உரிமை என்பதாகும். மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். அடுத்தவர் வாழ்வில் அத்துமீறி ஆதிக்கம் செலுத்துவது, தனக்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது என்பது மனித உரிமை மீறல் ஆகும். அப்பாவி மக்களின் உரிமையை பாதுகாக்கும் பொருட்டு, ஐ.நா.சபை ஒன்று கூடி, 1948, டிச., 10 ல், 'சர்வதேச உரிமை பிரகடனம்' என்ற சாசனத்தை வெளியிட்டது. அந்த சாசனம் இந்திய நாட்டின், முழு வடிவம் பெற்று, 1950, ஜன., 26ல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சாராம்சத்தை உள்ளடக்கி நமக்கு அளிக்கப்பட்டன. அதன்பிறகு, மனித உரிமை சட்டம், 1933ன் படி, தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைப்பதற்கும், மனித உரிமைகள் திறம்பட பாதுகாப்பு அளிப்பதற்கும் சட்டம் இயற்றப்பட்டது. இதில் மனித உரிமைகள் பிரிவு, 30ன் படி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மனித உரிமைகள் நீதிமன்றமாக செயல்படுகிறது. இந்நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யலாம். ஒரு நபருக்கு எதிராக அல்லது பல நபருக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால், மனித உரிமை மீறியவரின் பெயர், பதவி, அவர் செய்த மனித உரிமை மீறல் குற்ற செயல் குறித்து, காவல் துறை, மாவட்ட கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு புகார் அளிக்கலாம். அதன்பிறகு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், குற்ற விசாரணை முறை சட்டப்பிரிவு, 200ன் படி, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வக்கீல் வாயிலாக முறைப்படி புகார் தாக்கல் செய்யலாம். அந்த புகார் மனுவை நீதிமன்ற நடுவர் படித்து பார்த்து, புகார்தாரரை வரவழைத்து விசாரித்து புகார் மனுவை பதிவு செய்யலாம். அதன்பிறகு, எதிர்மனுதாரருக்கு முறைப்படி சம்மன் அனுப்பி வரவழைத்து, அவருக்கு புகார் மனு கொடுத்த பிறகு, சில கேள்விகள் கேட்கப்பட்டு, மாவட்ட நீதிமன்றம் மற்றும் மனித உரிமை நீதிமன்றத்திற்கு வழக்கின் கோப்புகளை மாஜிஸ்திரேட் அனுப்பி வைப்பார். வழக்கின் கோப்புகளை பெற்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை முறைப்படி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சாட்சி விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அந்த உத்தரவை எதிர்த்து, அப்பீல் செய்ய விரும்பினால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ