உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது விற்ற காசில் நலத்திட்டம் வேண்டாம் :மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மது விற்ற காசில் நலத்திட்டம் வேண்டாம் :மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

கோவை;மனிதநேய மக்கள் கட்சி, கோவை மத்திய மாவட்டம் சார்பில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, ம.ம.க., மாவட்ட செயலாளர் முகமது இப்ராஹிம் பேசியதாவது:அண்ணாதுரை வழியில் அரசை நடத்தும் முதல்வர் ஸ்டாலின், அவரைப் போலவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஏழை மக்கள் தங்களின் அன்றாட வருவாயை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு கொடுத்து விடுகின்றனர். மது விற்பனையால் கிடைத்த வருவாயை வைத்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டாம். மது விலக்கை அமல்படுத்திவிட்டு, இருக்கும் வருவாயில் நல்ல முறையில் அரசை நடத்த, தி.மு.க.,வால் முடியும் என நம்புகிறோம்.தேர்தல் வாக்குறுதியில், படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் எனக் கூறியதை செயல்படுத்த வேண்டும். மாறாக, மது விற்பனையை அதிகரிக்கவும், கடைகளை ஆய்வு செய்யவும் குழு அமைத்திருப்பது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், கோஷம் எழுப்பப்பட்டது. மதுவை கீழே ஊற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சர்புதீன், மாநில பிரதிநிதி அக்பர் அலி, மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், துணை செயலாளர்கள் ஷாஜகான், ஆஷிக் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி