உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊக்கத்தொகையாக ரூ.500 வேண்டும்!

ஊக்கத்தொகையாக ரூ.500 வேண்டும்!

பொள்ளாச்சி : 'பொங்கல் தொகுப்பு வழங்கிய ரேஷன்கடை பணியாளர்களுக்கு, நாளொன்றுக்கு 500 ரூபாய் வீதம், ஐந்து நாட்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் அறிக்கை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை பல்வேறு சிரமங்களுக்கிடையே, இரவு, பகல் பாராமல் ரேஷன் கடை ஊழியர்கள் செய்து முடித்துள்ளனர்.அவர்களுக்கு நாளொன்றுக்கு, 500 ரூபாய் வீதம், ஐந்து நாட்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மீதம் உள்ள கரும்புகளை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி