உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேரளாவை போல் தமிழகத்திலும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு விவசாய சங்க மாநாட்டில் கோரிக்கை தீர்மானம்

கேரளாவை போல் தமிழகத்திலும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு விவசாய சங்க மாநாட்டில் கோரிக்கை தீர்மானம்

தொண்டாமுத்தூர்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், பேரூர் தாலுகா மாநாட்டில், கேரள மாநிலத்தைப்போல, பயிர் மற்றும் உயிர் சேதங்களுக்கு இழப்பீட்டுத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், பேரூர் தாலுகா மாநாடு, தென்னமநல்லூரில் நடந்தது. இம்மாநாட்டிற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேரூர் தாலுகா தலைவர் தங்கராசு தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி, துணை தலைவர் பெரியசாமி சிறப்புரையாற்றினர். விவசாயிகள் தங்களின் குறைகளை கூறினர்.இம்மாநாட்டில், விவசாய விலைப் பயிர்களை சேதப்படுத்தி வரும், காட்டு யானை மற்றும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும், கேரளாவில் வழங்கப்படுவது போல, பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்களுக்கு இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும். நீர் நிலைகளில் விடப்படும் கழிவு நீரை கட்டுப்படுத்தி, நிலத்தடி நீர் மாசுபடாமல் காக்க வேண்டும், கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி