உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளியங்காடு அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

வெள்ளியங்காடு அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

மேட்டுப்பாளையம்:வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், தனியார் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், 55 லட்சம் ரூபாய் செலவில், நான்கு புதிய வகுப்புகளை கட்டி கொடுத்துள்ளனர். காரமடை அருகே வெள்ளியங்காட்டில், அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 900க்கும் மேற்பட்டமாணவ, மாணவியர் படிக்கின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லாத நிலையில், மாணவ, மாணவியர் மரத்தின் அடியில் அமர்ந்து பாடம் படித்து வந்தனர். இதை பார்த்த 'ஒன் ஸ்கூல் அட் எ டைம்' என்ற திட்டத்தின் கீழ், ஓசாட் அறக்கட்டளை உறுப்பினர்கள், லதா ரகுராம் அமெரிக்கா வாலண்டே டெக்னாலஜி மற்றும் பவர் ஸ்கூல் இந்தியா லிமிடெட் இணைந்து, 55 லட்சம் ரூபாய் செலவில், நான்கு வகுப்பறைகளை கட்டி கொடுத்தனர். ஒவ்வொரு வகுப்பறையிலும், 60 மாணவர்கள் அமர்ந்து படிக்கும்அளவில் வசதிகள் உள்ளன. மின்விளக்குகள் வசதியும் செய்யப்பட்டிருந்தது. புதிய வகுப்பறைகள் திறப்பு விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடிஸ் குலசேகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமதாஸ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி மற்றும் ஓசாட் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியர் அருள்சிவா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ