உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையில் குடிநீர் தேவை அதிகரிப்பு ;சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு

கோடையில் குடிநீர் தேவை அதிகரிப்பு ;சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. இதில், சில ஊராட்சிகளில் தற்போது வரை குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் கிணறு மற்றும் போர்வெல் தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.கோடை காலம் துவங்குவதால், ஊராட்சிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் போர்வெல்லில் இருக்கும் தண்ணீர், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மேலும் குறைய வாய்ப்புள்ளது.சில பகுதிகளில், தற்போதே போர்வெல்லில் தண்ணீர் இல்லை. எனவே, மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, ஊராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.ஒரு சில ஊராட்சிகளில், தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, இப்போதே முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை காலத்தில், தண்ணீர் எடுக்க பயன்படும் மோட்டார் பழுது ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கோடையில் மக்களின் குடிநீர் தேவை அதிகரிக்கும், அதனால், தற்போது வழங்கப்படும் குடிநீரை, மக்கள் நலன் கருதி கூடுதலாக வழங்க, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீர் குழாயில் கசிவு, சேதம் ஏற்பட்டால், உடனடி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால், மக்களுக்கு குடிநீர் வினியோகத்தில் பெரும் சிரமம் ஏற்படும், என, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை