உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல: கவர்னர் ரவி பேச்சு

இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல: கவர்னர் ரவி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.கோவையில் நடந்த கருத்தரங்கில் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்தில் தேசிய அளவிலான சுதந்திர போராட்ட தலைவர்கள் பற்றிய பாடங்கள் இல்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் மிகைப்படுத்துதல், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களே உள்ளன. இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை. இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல.

ஒளி...!

ஆங்கிலேயர் வரும் முன்பு வரை நூற்றாண்டுகளாக பாரத் என்றே அழைக்கப்பட்டு வந்தது. பாரத் என்றால் ஒளி. பாரத் என்பதை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை புரிந்து கொள்ள முடியும். இந்தியா என்பது பாரத் என்பதை ஒத்த அர்த்தமல்ல. பாரத் என்பதை இந்தியா எனும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

P D Paul
ஜூன் 09, 2024 17:25

This halfbacked always speaks like this


sellva
ஜூன் 09, 2024 04:42

இந்து என்ற பெயரை யார் கொடுத்தது ? அதுவும் தேவை இல்லை என்று எடுத்து விடுவோமா ?


sankaranarayanan
ஜூன் 08, 2024 22:43

ஆளுநர் கூறுவது முற்றிலும் உண்மை "பா" என்றால் ஒளி "பிரகாசம்" என்றுதான் அர்த்தம் "ரதம்" என்றால் "தேர்" அல்லது ஒரு பெரிய வாகனம். இந்த உலகில் ஒளியுடனம் நன்கு பிராகாசத்துடனும் வலம் வரும் தேர் அல்லது ஒரு பெரிய வாகனம் என்றே பொருத்தமான அர்த்தம் கன்யாகுமரி முதல் இமயமலை வரையிலுள்ள பகுதிக்கு "பாரதம்" என்றுதான் பெயர் இந்த பகுதியில் வசிப்பவனுக்கு "பாரதி" என்றே பெயர்


venugopal s
ஜூன் 08, 2024 21:37

இவருடைய சேவையைப் பாராட்டி பாஜக இவருக்கு மத்திய மந்திரி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போய் விட்டது போல் உள்ளதே!


Gopalan
ஜூன் 08, 2024 18:06

இப்போது எதிர் கட்சிகள் INDIA கூட்டணி. இந்த பெயர் வைத்ததால் இவர்களுக்கே புரியவில்லை. குழப்பம் தான். அதனால் தான் இந்த கூட்டணி சீக்கிரமே உடைந்து தனி கட்சிகளாக மாறும் நிலை வெகு தூரம் இல்லை. பாரதமும் நிலைத்து நிற்கும். வந்தே பாரதம்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 08, 2024 20:02

இதையேத்தான் இந்தியா கூட்டணி ஆரம்பிச்ச முதல் நாள் சொன்னீங்க... வருஷம் ஒண்ணாச்சு... தேர்தலும் முடிந்து... இந்தியா கூட்டணியின் பலம் அதிகமானதால்... பாஜக அறுதி பெரும்பான்மை பெற முடியாமல்... நித்திஷ்.. சந்திரபாபுநாயுடுகிட்டேயும் கையேந்த வச்சது இந்தியா கூட்டணி... இப்ப சீக்கிரம் உடையும்னு சொல்றீங்க... ஆளுங்கட்சியா ஆகியிருந்தா... உங்க கனவு நனவாகியிருக்கலாம் ஒருவேளை... ஆனால்... இதற்கு “வாய்ப்பில்ல ராசா”...


முதல் தமிழன்
ஜூன் 08, 2024 17:34

எதையாவது உதவாத விஷயத்தை சொல்லிக்கொண்டு.


என்றும் இந்தியன்
ஜூன் 08, 2024 17:18

ஐயோ ஐயோ திருட்டு திராவிடம் வைக்குமே ஒரே ஒப்பாரி கவர்னர் இப்படி கவர்னர் அப்படி என்று???பாரதம் அதாவது மகாபாரதம் என்பது இந்தியா பங்களா தேஷ் பாகிஸ்தான் பர்மா ஆப்கானிஸ்தான் என்று இப்போது இருந்து இருக்கும் நாடுகளை சேர்த்த ஒரு பிரதேசம் / நாடு. இந்தியா என்பது இதெல்லாம் பிரிந்து போகவைத்த ஆங்கிலேயன் அளித்த பெயர் இது. ஆகவே கவர்னர் சொல்வது மிக மிக சரியான வார்த்தை


முருகன்
ஜூன் 08, 2024 16:25

தேர்தல் அடி இப்படி பேசுகிறது


GMM
ஜூன் 08, 2024 15:27

இந்தியா-பாரத் ஒன்றல்ல. சரி தான். பாரத்தில் இல்லாத குழப்பம் அந்நியரால் இந்தியாவில் திணிக்க பட்டது. பாரத்தை உருவாக்க சில முக்கிய கொள்கை பிரச்சினைகளுக்கு கட்டண ஆலோசகர்கள் மூலம் தீர்வு காண வேண்டும். மக்கள் இட ஒதுக்கீடு , இலவசம்... வேண்டாம் என்று கூற செய்ய வேண்டும். மாநில கட்சிகள் சமூக நீதி, கூட்டாட்சி தத்துவ பிதற்றல் தானே நிறுத்தி கொள்ள வேண்டும். கோலிஜிய தேர்வை தானே மத்திய அரசிடம் நீதிபதிகள் ஒப்படைக்க வேண்டும். மத்திய விசாரணை அமைப்புகள் ஊழல் கண்டறியும் போது, உள்ளூர் ஊழல் ஒழிப்பு பிரிவு பிரதான பதில் மனுதாரராக இருக்க செய்ய வேண்டும். சிறுபான்மை மக்கள் அந்தஸ்தை, மாநில சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்று மறுக்க வேண்டும். வளம் இருந்தும் கடன், வறுமைக்கு காரணம் தவறான எதிர் விளைவுகள் இல்லாத அரசியல் ஆதிக்க கொள்கை முடிவுகள். அடுத்த 5 ஆண்டுகள் சீர்திருத்த ஆண்டுகளாக இருக்க வேண்டும்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 08, 2024 16:49

அய்யா... அங்குசாமி... //// அடுத்த 5 ஆண்டுகள் சீர்திருத்த ஆண்டுகளாக இருக்க வேண்டும்.-/// இந்த ஐந்து ஆண்டுகள் ஆணியே புடுங்க முடியாது... ஏன்னா, நித்தீஷ் - சந்திரபாபு நாயுடுகாரு உன்னாரு... தெலுசா...? உங்க இஷ்டத்துக்கு பேரையும், ஊரையும் மாத்த முடியாது... நேத்தே “அக்னி பாத்” திட்டத்தை கொண்டு வரக்கூடாது...ன்னு பதவி ஏற்பதற்கு முன்னரே ஆரம்பிச்சுட்டாரு... இனிமே உங்க கதி அதோ கதிதான்... இனிமே “தேவையுள்ள ஆணி... தேவையில்லாத ஆணி எது..?” என்பதை நித்தீஷ், சந்திரபாபு நாயுடுதான் தீர்மானிக்க வேண்டும் சாமியோவ்...


Oviya Vijay
ஜூன் 08, 2024 15:18

சுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கியதிலிருந்து தமிழகத்தில் பிஜேபி கால் பதிக்கும். பிறகு பார்த்துகொள்ளலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு தேர்தல் ரிசல்ட் என்னவோ பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கும்... கண்டிப்பாக தமிழகத்தில் கவர்னர் பதவியில் தனக்குண்டான அனுபவங்களைப் பற்றி இவர் குறிப்பிடாமல் அது முழு வடிவம் பெறாது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை