| ADDED : ஜன 08, 2024 02:40 AM
கோவை;''உலகுக்கே வழிகாட்டும் நாடாக, 2047ல் இந்தியா இருக்கும்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.'நமது லட்சியம்; வளர்ச்சியடைந்த பாரதம்' விழிப்புணர்வு யாத்திரை துவக்க விழா, கோவை சங்கனுார் ரோட்டில் உள்ள, திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மத்திய இணை அமைச்சர் முருகன் துவக்கி வைத்தார்.அதன் பின் அவர் பேசுகையில், ''வரும், 2047ல் உலகுக்கு வழிகாட்டும் நாடாக இந்தியா இருக்கும். அதற்குள் இந்தியாவை வல்லரசாக்குவதே பிரதமர் மோடியின் லட்சியம். மத்திய அரசால் பயனடைந்த பயனாளர்களை, நேரடியாக சந்திப்பது இந்த யாத்திரையின் நோக்கம். நாடு மிகப்பெரிய வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது. கோவைக்கு இரு வந்தேபாரத் ரயில்கள் கொடுக்கப்பட்டுள்ளன,'' என்றார். பா.ஜ., மாநில பொருளாளர் சேகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜித்தேந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.